தேனிசை தென்றல் தேவா குடும்பத்தில் மற்றுமொரு துயரம்! நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் காலமானார்.
37 வயதான கார்த்திக் சபேஷ் உடல் நலக்குறைவால் இன்று(20) சென்னையில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திரையுலகினர் இரங்கல்
இருவாரங்களாக இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.
கார்த்திக் சபேஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4:30 மணியளவில் வளசரவாக்கம் மயானத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் அடையாளம் பதித்த கார்த்திக் சபேஷின் மறைவுச் செய்தி அவரது இரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி
இவர் ட்ரீம்ஸ் (2004), வல்லவன் (2006), காதல் சொல்ல வந்தேன் (2010), உதயம் NH4 (2013), பட்டத்து யானை (2013), பர்மா (2014), ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014), மகாபலிபுரம் (2015) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவரது மறைவுக்கு குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலியும் செலுத்துகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இசை அமைப்பாளர் தேவா உயிரிழந்த நிலையில், தற்போது கார்த்திக் சபேஷ் காலமாகியுள்ளமை தேவா குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக்கின் தந்தை பிரபல இசையமைப்பாளர் சபேஷ் கடந்தாண்டு ஒக்டேடாபர் 23 ஆம் திகதி காலமானமை குறிப்பிடத்தக்கது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri
ஜெயிலர் 2-வில் கேமியோ.. ஆனால், இயக்குனர் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ.. வேற லெவல் கூட்டணி Cineulagam