கோவிட் தொற்றாளிகளின் அதிகரிப்பு அல்லது குறைவு பற்றி சரியான தகவல்களை வெளியிட முடியாத நிலைமை!
சமூகத்தொற்றாளர்கள் தொடர்பில் தெளிவான தீர்மானங்களை எடுக்க முடியாது என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
தொற்று உறுதியாளர்களின் முதல் தொடர்பாளர்களை தனிமைப்படுத்தல் மற்றும் நோய் அறிகுறி உடையவர்களுக்கு பீ.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனை நடாத்துவது குறித்து சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்று நிருபத்தின் அடிப்படையில் மிகவும் வரையறுக்கப்பட்ட வகையிலேயே கோவிட் பரிசோதனைகளை நடாத்த முடிகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல்வேறு பிரசேதங்களில் கோவிட் பரிசோதனைகளை வரையறுக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான வரையறைகள் காரணமாக நோய்த் தொற்றாளிகளின் அதிகரிப்பு அல்லது குறைவு பற்றி சரியான தகவல்களை வெளியிட முடியாத நிலைமை உருவாகியுள்ளது என உபுல் ரோஹன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.





அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
