எரிவாயு அடுப்பு வெடித்தல் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் : யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

Investigation Gas Jaffna District Police Station
By Independent Writer Dec 01, 2021 01:42 PM GMT
Report

பாவனையாளர் அதிகார சபையினரால் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடித்தல் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

எரிவாயு அடுப்புகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு அடுப்புகள் வெடித்துச் சிதறிய சம்பவங்கள் இன்று வரை மூன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலில் கந்தரோடை அதன் பின்னர் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.


நாங்கள் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து கடந்த வார இறுதியில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக குறித்த நிலைமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தோம்.

அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமைப்பீடம் இந்த விடயங்களை, அதாவது எரிவாயு அடுப்பு வெடித்தல் சம்பவங்களை அப் பிரதேச பொலிஸ் நிலையங்களின் ஊடாக விசாரணை செய்து அதனைச் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளார்கள்.

எனவே எமது பாவனையாளர் அதிகார சபையினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடித்தல் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக இந்த விடயமானது தேசிய மட்டத்தில் இடம்பெற்றுவரும் ஒரு சம்பவமாகும். எனவே இந்த விடயம் தொடர்பில் பாவனையாளர்கள் எச்சரிக்கையாக இந்த விடயத்தைக் கையாள வேண்டும். குறிப்பாகப் புதிதாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றவர்களிடமிருந்தே இந்த முறைப்பாடு அதிகம் கிடைக்கப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US