இந்திய இழுவை படகுகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்: டக்ளஸ் தேவானந்தா(Video)
கிளிநொச்சி - கிராஞ்சி கடல் பரப்பில் 14 இந்திய இழுவை படகுகள் தரித்து விடப்பட்டுள்ள நிலையில், அவற்றை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இந்திய இழுவைப்படகு விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட பொழுதே அவர் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தரித்துள்ள இந்திய இழுவை படகுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகின்றது. அதில் இருந்து வெளியேறும் எண்ணைப் படலங்களால் சூழல் மாசுபடுகின்றது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனக் கடல் தொழில் அமைச்சர் அதிகாரிகளிடம் வினவினார்.
கிளிநொச்சி நீதிமன்றில் இரண்டு வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இரண்டு படகுகள் தொடர்பான உரிமை கோரலுக்கு அடுத்த நீதிமன்ற விசாரணைக்குச் சம்மந்தப்பட்டவர்கள் சமூகமளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஏனைய படகுகள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தமை என்பதாலும், அவை கடற்படையினர் வசம் உள்ளமையாலும் அவை தொடர்பான தகவல்கள் தனக்குத் தெரியாது.
தமது கட்டுப்பாட்டில் 14 படகுகள் காணப்படுவதாகவும், அவற்றை அகற்றுவதற்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார். குறித்த படகுகளை விற்று நிதியை தமக்கு தருமாறு இந்தியத் தூதுவர் சந்திப்புக்களில் தன்னை கோருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவந்து தரப்படும்போதே விஞ்ஞான ரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் விசை குறைந்த மற்றும் அளவில் மட்டுப்படுத்தப்பட்ட படகுகள் பயன்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தான் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஆனால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த முறையில் தொழிலினை செய்யலாம். மிக அடிமட்டம்வரை புகாத வகையில் தொழிலைச் செய்தால் அடிமட்டத்தில் பாதிப்புக்கள் இல்லை. அதற்கு முறையான விடயங்களைக் கையாண்டால் மேற்கொள்ள முடியும்.
அதற்கான அனுமதி வழங்கப்படாத விடத்து அது சட்டவிரோத தொழிலாகவே அமையும்.
அதனைச் செய்ய முடியுமாக இருந்தால் விரைவுபடுத்த வேண்டும். இல்லையேல் அது
சட்டவிரோதமானதாகவே இருக்கும்.
அவற்றை
இரும்புக்காக விற்பது அல்லது செயற்கை பாறைகளை உருவாக்கும் வகையில் கடலிற்குள்
போடுவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது
தெரிவித்தார்.



ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri