ராஜிதவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யும் சாத்தியக்கூறுகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட உள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜித சேனாரத்னவைக் கைது செய்வதற்காக சமீபத்திய நாட்களில் அவர் இருந்த பல இடங்கள் தேடப்பட்ட போதிலும், அவரைக் கைது செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது.
ராஜிதவை கைது செய்ய நடவடிக்கை
மேலும் ராஜிதவை கைது செய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவிருந்தபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா




