கிளிநொச்சியில் சட்டவிரோத கடலட்டை பண்ணை அகற்ற நடவடிக்கை
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி கடல் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று (11.03.2026) மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் பா. நிருபராஜ், பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பண்ணை உரிமையாளரின் கோரிக்கை
அதிகாரிகள் பண்ணையை அகற்ற முயன்றபோது, கடலட்டை பண்ணையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமது வாழ்வாதாரமாக கடலட்டை பண்ணையை மேற்கொண்டு வருவதாகவும், உரிய அனுமதி கிடைக்கும் வரை பண்ணையை அகற்ற வேண்டாம் என்றும் அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை கடலட்டை பண்ணை அமைப்பதற்காக 122 இடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிரடி நடவடிக்கை
அந்த 122 பயனாளிகளின் பெயர் விபரங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் பிரதேச செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கு கடலட்டை பண்ணையாளர்களும் சம்மதம் தெரிவித்ததுடன், பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். குறித்த கடலட்டை பண்ணை 2021ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று பல முறை உரிய திணைக்களங்கள் இந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுமாறு அறிவித்திருந்த போதிலும் அது அகற்றப்படாததால், அதை அகற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri