கோவிட்டினால் மரணிப்பவர்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை
கோவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரில் உள்ள மஜ்மா நகர் காணியில் நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஆகிறார்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கூட்டம் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள், கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேச பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் ஒட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள் சுகாதார அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது கோவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளை அவசரமாக மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அரசுக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 10 கோவிட் ஜனாசாக்கள் குளிரூட்டிகளிலும் பிரேத அறைகளிலும் உள்ளதாகவும், இந்த ஜனாசாக்களை இன்னும் ஒரு சில தினங்களில் குறித்த காணியில் நல்லடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.





குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam