உள்ளூராட்சித் தேர்தலுக்கான இலவச தபால் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை: ராஜித கே.ரணசிங்க
நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான இலவச தபால் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை இந்த இலவச தபால் வசதி நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதி அஞ்சல்மா அதிபதி ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்த சுற்றுநிரூபம் சகல மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதிகளுக்கும், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர்கள், அஞ்சல் அதிபர்கள் மற்றும் உப அஞ்சல் அதிபர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச தபால் வசதிகள்
மேலும், உள்ளூராட்சி தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோரால் அனுப்பப்படும் கடிதங்கள், பொதிகள் மற்றும் ஆவணங்களையும், கிராம உத்தியோகத்தர்களுக்கு, மாவட்டத் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களுக்கு, பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளருக்கு அனுப்புவதற்காக தபால் இடப்பட்ட பொதிகளையும், கடிதங்களையும் முன்னுரிமையளித்து முதல் தபாலிலேயே அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்காக ஏனைய அரச திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்காகவும் இம்முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
