உணவு நெருக்கடிக்கு தீர்வு! பட்டினியால் வாடுவோருக்கு உணவு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு சுமார் 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுவதாக தேசிய உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான பல்துறை கூட்டுப் பொறிமுறை அமுலாக்க வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குடும்பங்களின் தகவல் சேகரிப்பு
இந்தநிலையில் வீடு வீடாக சென்று உணவு நெருக்கடி குறித்த தகவல்களை சேகரிக்கவும், இது தொடர்பாக தேவையான தரவுகளை தேவைப்பட்டால் இணையத்தின் ஊடாக சேகரிக்கவும் படகொட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உணவு வழங்க திட்டம்
இலங்கையில் எவரையும் பட்டினியால் விட வேண்டாம் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கு தீர்வாக சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதியளவு உணவு கிடைக்காதவர்களுக்கு உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பிரச்சினைக்கு அரச அதிகாரிகளே ஓரளவு பொறுப்பு
என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan