செம்மணியை நினைவகமாக பேண நடவடிக்கை - தவிசாளரின் முக்கிய கோரிக்கை
செம்மணி சித்துபாத்தி இந்து மயானம்தமிழின அழிப்பின் நினைவகமாக பேணும் முன்மொழிவு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரனினால் நேற்று(17.06.2026) சபை அமர்வில் முன்மொழியப்படட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
குறித்த முன்மொழிவினை வைத்து உரையாற்றி தவிசாளர் மயூரன், தன்னுடைய உரையில் இனஅழிப்பு செய்யப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள் இன்று செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றனர்.
செம்மணியை நினைவகமாக பேண நடவடிக்கை
எம்மீது நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பின் சாட்சியகமாக இந்த மயானம் காணப்படுகின்றது.

இந்நிலையில் இன அழிப்பின் சாட்சியங்களை பாதுகாக்க வேண்டியதும் அதனை இளைய தலைமுறைக்கு கடந்த வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
குறித்த இந்து மயானம் எமது சபை எல்லைக்குள் காணப்படுகின்ற நிலையில், இதனை ஒரு மயானமாக தொடர்ந்து பேணாமல் இது எம் மீதான இனஅழிப்பின் ஒரு சாட்சியகமாக நினைவகமாக பேணுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் செம்மணி சித்துபாத்தி இந்து மயான சபையினருடன் கலந்துரையாடல் செய்து அது தொடர்பான விபரங்களுடன் குறித்த முன்மொழிவினை உங்களின் ஏகமனதான ஆதரவுடன் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதற்காக அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.