ஓய்வுபெற்ற படையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை : ஜனாதிபதி உறுதி
ஓய்வுபெற்ற முப்படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார்.
பத்தரமுல்லை, அகுரேகொட இராணுவத் தலைமையகத்தின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் நலனுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள "முன்னோடிகளின் இல்லம்" திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வேலைத்திட்டங்கள்
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இதுவரை பொருத்தமான வேலைத்திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
அதன் காரணமாக இராணுவத்தினர் ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது எனவே அதனைக் கருத்திற் கொண்டு, ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான சிறப்பு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் ரணவிரு சேவை அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தொடர்ந்தும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |