13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சர்
நாட்டில் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.
மேலும், தமிழ்த் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காணப்படுகின்றன.
13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறை
அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண வேண்டும் என்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கரிசனையுடன் செயற்படுகிறார்.
இந்த நிலையில், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனத்திற் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
