வாகனங்களைச் செலுத்துவோருக்கு எச்சரிக்கை - அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவு எண்கள் வழங்கும் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முறையான பதிவு எண்கள் வழங்கும் திட்டம் முழுமையாகச் செயற்படுத்தப்படாத சூழலை பயன்படுத்தி, சில கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனை தடுக்கும் நோக்கில், தரப்படுத்தப்பட்ட இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு மோட்டார் வாகன ஆணையாளருக்கு, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

அலங்கார இலக்கத் தகடு
தற்போது பல வாகன உரிமையாளர்கள் வெவ்வேறு வண்ணங்கள், எழுத்துருக்கள் (Fonts) மற்றும் இலச்சினைகள் அடங்கிய அலங்கார இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய நடைமுறையை ஒழுங்குபடுத்தவும், வீதிப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயற்படுவோரைக் கண்டறியவும் நாடு முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri