இலங்கை மக்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரண பொதி
2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரண பொதியை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தினால் வர்த்தக அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தினால் ஒதுக்கப்பட்ட 15000 மில்லியன் ரூபாய் பணத்தை பயன்படுத்தி இந்த நிவாரண பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பொருளாதார ரீதியில் மிகவும் வறுமையான நிலைமையில் உள்ள குடும்பங்களை தெரிவு செய்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் கஷ்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக இது வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணக் கூப்பன்களில் 50 வீதம் உள்ளூர் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கட்டாயமாக்கப்படும் என நம்புவதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



