உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Sri Lanka Army Jaffna Northern Province of Sri Lanka
By Theepan Apr 25, 2026 12:17 AM GMT
Report

காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் அந்த காணிகளை பெற்று தருவோம். காணிகளை பலவந்தமாக வைத்துக்கொள்ளும் எண்ணம் தேசிய மக்கள் சக்தியினருக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கு பிரதேசத்தில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை மீள தம்மிடமே ஒப்படைக்குமாறு அப்பகுதி மக்கள் நேற்றையதினம்(24) மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு செல்லும் பாதைக்கு அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தி

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் போராட்டம் நடைபெற்ற இடத்தில் சென்று சந்தித்ததுடன் பின்னர் அவர்களின் பிரதிநிதிகள் சிலரை தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு அழைத்து சக நாடாளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீபவானந்தராசாவுடன் இணைத்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Action To Be Taken Lands Within High Security Zone

அதன் போது, காணி உரிமையாளர்களிடம் நாடளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கருத்து தெரிவிக்கும் போது, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்குரிய காணிகள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயத்தில் நாம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம். மக்களுக்கு ஒப்படைக்கப்படும் காணிகளை உரிய வகையில், உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினை நிரந்தரமாக தீரும்.

உங்கள் வசம் ஆவணங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்குரிய மண் உங்களுக்கே சொந்தமாகும். எமது ஆட்சி மக்களுக்கானது, எனவே, மக்களின் சொத்துகளை பலவந்தமாக வைத்துக்கொள்வதற்குரிய எண்ணம் எதுவும் இல்லை.

தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியம் அற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு எமது அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நிச்சயம் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என தெரிவித்துள்ளார்.

இராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை

அதேவேளை , கடந்த மாதம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா தெரிவித்திருந்த நிலையில் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

அதேபோன்று பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆலயத்திற்கான பாதை இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் தனியார் காணிகள் ஊடான தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வருகின்றனர்.

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Action To Be Taken Lands Within High Security Zone

ஆலயத்திற்கு செல்லும் பாதையில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் அமைந்துள்ளதால் குறித்த பாதை விடுவிக்கப்படவில்லை. அதில் உள்ள வாகன திருத்தகத்தினை அகற்றி பாதையை விடுவிக்க வேண்டும் என கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன போதிலும் அந்த பாதை விடுவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையினர் கடந்த ,மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் இராணுவத்தினரின் வாகன திருத்தகத்தை அகற்றி ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Action To Be Taken Lands Within High Security Zone

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Action To Be Taken Lands Within High Security Zone

அநுரவை கைது செய்வோம்..! நிதி அமைச்சரின் செயலாளர் நெருக்கடியில்

அநுரவை கைது செய்வோம்..! நிதி அமைச்சரின் செயலாளர் நெருக்கடியில்

மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US