நாட்டு மக்களுக்காக பொலிஸார் எடுக்கவுள்ள நடவடிக்கை
கோவிட் சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து மேல் மாகாண மக்களுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை இம்மாத இறுதி வாரத்தில் முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு குழுக்களின் ஊடாக இந்த விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தினசரி கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 700 பேரை கடந்துள்ளது.
இதனை கருத்திற் கொண்டு கொழும்பு உட்பட மேல் மாகாண மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கருதி இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
