தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.
இந்த பகுதிகளுக்கு விஜயம் செய்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் மற்றும் தமிழக கூட்டுறவு அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் மக்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளனர்.
இதன்போதே, இலங்கை அகதிகளுக்காக 20 கோடி இந்திய ரூபா செலவில் 1000 வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக குறித்த மூன்று முகாம்களை ஒன்றிணைத்து நிரந்த குடியிருப்பை நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கான 108 முகாம்கள் உள்ளன.
இதனிடையே, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இந்திய மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
