தவறு செய்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் எம்.பி

Sri Lanka Imran Maharoof Crime
By H. A. Roshan Dec 15, 2025 03:50 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

in சமூகம்
Report

நாட்டிலுள்ள மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யுங்கள் என்ற தொனிப்பொருளில் சில செய்திகள் ஊடகங்களிலும், சமுக வலைத்தளங்களிலும் அண்மைக்காலமாக பரவி வருகின்றது.

புலம்பெயர் தமிழர்களின் காணிகளை கோரிய மனோ கணேஷன்! காணொளி மூலம் பதிலடி வழங்கிய அர்ச்சுனா

புலம்பெயர் தமிழர்களின் காணிகளை கோரிய மனோ கணேஷன்! காணொளி மூலம் பதிலடி வழங்கிய அர்ச்சுனா

சுற்றறிக்கை

இதனை வாசிப்போர் எல்லா கிராம உத்தியோகத்தர்களும் தவறு செய்கின்றனர் என்ற மனப்பதிவைப் பெறுகின்றனர். இதனால் நேர்மையான கிராம உத்தியோகத்தர்கள் பலர் பெரும் மனக் கவலை அடைந்துள்ளனர்.

பெரும் இன்னல்களுக்கு மத்தியிலேயே கிராம உத்தியோகத்தர்கள் பணி புரிகின்றனர். சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் கூட உள்ளன.

தவறு செய்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் எம்.பி | Action Taken Against Those Who Commit Wrongdoing

அனர்த்த காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் ஒருசில நாட்களில் கிராம உத்தியோகத்தர் நேரில் சென்று அவதானிப்பது என்பது சிரமமான காரியம்.

மனச்சாட்சியுள்ள எவரும் இதனை ஏற்றுக் கொள்வர். அரசியல்வாதிகள் மக்களைக் கவரும் வகையில் ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர். ஆனால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சில மட்டுப்பாடுகள் உள்ளன.

எனவே கிராம உத்தியோகத்தர்கள் அரசியல்வாதிகளின் அறிக்கைக்கேற்ப செயற்படுவதா, சுற்றறிக்கைக்கேற்ப செயற்படுவதா என்ற கேள்வி உள்ளது.

உரிமையாளரிடம் கையளிப்பட்ட மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள்..!

உரிமையாளரிடம் கையளிப்பட்ட மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள்..!

நடவடிக்கை

சுற்றறிக்கையை மீறி அரசியல்வாதிகளின் செய்திகளுக்கேற்ப செயற்பட்டால் கணக்காய்வு திணைக்களத்தின் நடவடிக்கைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தமது தொழிலையும் பாதுகாக்கும் வகையிலேயே கிராம உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டியுள்ளது.

எனவே, அறிக்கைகள் வெளியிடுவோர் தவறு செய்வோருக்கெதிராக முறைப்பாடு செய்யுங்கள் என்ற வகையிலேயெ வெளியிட வேண்டும். எல்லோரையும் பாதிக்கின்ற வகையில் அறிக்கை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

தவறு செய்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இம்ரான் எம்.பி | Action Taken Against Those Who Commit Wrongdoing

சில கிராம உத்தியோகத்தர்களது குடும்பங்களும் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. அதை ஒரு புறம் வைத்து விட்டுத்தான் இவர்கள் பணி புரிகின்றார்கள். கிராம உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக தமது பிரிவுக்கு மேலதிகமாக சிலர் இன்னொரு பிரிவையும் கவனிக்கின்றனர்.

இந்த விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் பணிபுரியும் கிராம உத்தியோகத்தர்கள் ஏனைய சில சேவையாளர்களை ஒப்பிடுகையில் குறைந்த சம்பளமே பெறுகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 எனவே, ஒட்டு மொத்த கிராம உத்தியோகத்தர்களும் பாதிக்கப்படும் வகையில் செய்திகளை வெளியிடாது தவறு செய்வோர் குறித்து மட்டும் தகவலைச் சேகரிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவது பொருத்தம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

யாழ்.சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடத்திற்கான பணிகள் ஆரம்பம்..

யாழ்.சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடத்திற்கான பணிகள் ஆரம்பம்..

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US