வடக்கில் இயங்காமலுள்ள தொழிற்சாலைகளை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நா.வர்ணகுலசிங்கம்
அரியாலையில் அமைக்கப்பட்ட கடல் அட்டை குஞ்சு உற்பத்தி பண்ணை 2016 ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகவும் அங்கு கடலட்டை குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்குப் பொருத்தமாக இல்லாமையாலேயே தற்போது அந்த கடலட்டை பண்ணை பூநகரிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட மீனவர் சம்மேளன உபதலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவைக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையம் வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மட்டுமே உண்டு.
Peopleஅதனை யாரும் குழப்ப வேண்டாம். மக்களுக்கான வாழ்வாதாரத்திற்காக வடக்கில் இயங்காமலுள்ள காங்கேசன்துறை சீமெந்து ஆலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஆகியவற்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலை இல்லாமல் எமது மக்கள் அமைச்சர்களுக்குப் பின்னாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பின்னாலும் அலைந்து திரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
