குருக்கள்மட பறவைகள் சரணாலய சூழலில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயம் ஈரநிலப்பகுதி பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பறவைகள் சரணாலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் பயணிப்பவர்கள் குப்பைகளையும், கழிவுகளையும், மூட்டை மூட்டையாக குறித்த பிரதேசத்தில் வீசிவிட்டுச் செல்வதனால் சரணாலயத்திலுள்ள பறவைகளுக்கும், அச்சூழலுக்கும் பலத்த துர்நாற்றத்தினால் பாதிப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்கள் வீதியினால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வரல்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் விடுத்த கோரிக்கை
பலர் வாகனங்களில் வந்து குப்பைகளை இடும் சந்தர்ப்பங்களில் அவர்களை மக்கள் பிடித்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் அப்பகுதிக்கு சென்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் நிலமையை பார்வையிட்டுள்ளார்.
அவரிடம் குருக்கள்மடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அப்பகுதியில் கண்காணிப்புக் கமரா பொருத்தி அவதானித்து இவ்வாறு தொடர்ச்சியாக குப்பைகள் வீசும் சந்தர்ப்பங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக பிரதேச சபை தவிசாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.







ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 16 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam