ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்: பற்றிக் டிரஞ்சன் வலியுறுத்து
வடக்கு மாகாணத்தில் பாடசாலைப் பிள்ளைகளுடன் முறைகேடுடாக நடந்த ஆசிரியர்களுக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதிப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாணக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று (12.08.2023) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி விடயத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலைகளில் மாணவர்கள் காயமடையும் அளவுக்கு ஆசிரியர்கள் தண்டிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை சரியான முறையில் எடுக்கப்படவேண்டும்.
அத்துடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இதனைக் கண்காணிக்க வேண்டும். மேலும், தொடர்ச்சியாக இதே செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன் போது வடக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் , சில வலயங்களில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் , ஆசிரியர் வளத்தின் சமமான பங்கீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
