யாழில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை (Video)
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலாவி பற்றைக்காட்டுப் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (13.11.20220 பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது 1100 லீட்டர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன், 58 லீட்டர் ஸ்பிரிட் கைப்பற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி மதுவரி திணைக்களத்தினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு
நடவடிக்கையின்போது குறித்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உற்பத்திக்கான உபகரணங்கள் அணைத்தும் மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர்.
தொடர் விசாரணையில் ஈடுபட்டுவரும் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினர் சான்றுப்பொருட்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - குருநகர்
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 41 கிலோ கஞ்சா கடற்படையினரால் இன்று (14.11.2022) கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேநேரம் கஞ்சாவை கடத்தி வரப் பயன்படுத்தப்பட்ட படகும் கடற்படையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு பிடிக்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேகநபருடன் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
