திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்
திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் இன்று (27.05.2023) நடைபெறவிருந்த திருமணத்திற்கு தயாராகி இருந்த மணப்பெண் வீட்டிற்கு அதிகாலை 03 மணியளவில் வந்த நபர் ஒருவர் அசிட் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபருடன் காதல் உறவை ஏற்படுத்தி பின்னர் பெற்றோரின் எதிர்ப்பினால் உறவை முறித்துக் கொண்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த இளைஞரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட யுவதி மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிகம பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
