இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்புக்கு பின்னால் பலத்த சந்தேகங்கள்: பல்கலைக்கழக பேராசிரியை குற்றச்சாட்டு
இலங்கையில் குறிப்பாக பெரியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கணிசமான பிரச்சினையை கொண்டுள்ள போதைப்பொருள் பாவனையை ஒடுக்குவதில் செயல்பாட்டு திறனின்மை வெளிப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே அதிகரித்த ஒத்துழைப்புடன் பிராந்திய அணுகுமுறை தேவைப்படுகிறது என்று ரொட்டர்டம் பல்கலைக்கழகத்தின் நெருக்கடி மற்றும் சமாதானம் தொடர்பான சர்வதேச நிலையத்தின் உதவிப் பேராசிரியை சியாமிக்கா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
58,000 க்கும் மேற்பட்ட கைதுகள்
இலங்கையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஒடுக்குமுறை 58,000 க்கும் மேற்பட்ட கைதுகள் மற்றும் கணிசமான போதைப்பொருள் பறிமுதல்கள் என்பன கலவையான முடிவுகளை அளித்துள்ளன.
இதன்போது கடுமையான, உரிமைகளை மீறும் அணுகுமுறை, வறிய பயனர்கள், சிறு-நேர குற்றவாளிகள் மீது சமமற்ற கவனம் செலுத்துதல் மற்றும் பணக்கார நுகர்வோர் மற்றும் பெரிய குற்றவாளிகளை புறக்கணிப்பது போன்ற செயற்பாடுகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக சியாமிக்கா ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகள் முதல் ஊழல் மோசடிகள் வரை பல சவால்களுக்கு மத்தியில். உள்நாட்டில், போதைப்பொருள் நுகர்வு அதிகரிப்பு, குறிப்பாக ஆரோக்கியமான வயதுடைய பெரியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச ஆதரவு இருந்தபோதிலும், தடுப்பு மற்றும் மறுவாழ்வுக்கான சமூகம் தலைமையிலான திட்டங்கள் எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
இதற்கு வேர்-நிலை ஒழிப்பு உத்திகள் இல்லாததே காரணமாகும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணமோசடி குற்றச்சாட்டுகளால் பொதுமக்கள் மத்தியில் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து கைதியை சித்திரவதை செய்ததாக கூறப்படும காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் தலைமையில் இந்த அடக்குமுறை மேற்கொள்ளப்படுவது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
இவர்கள் இருவரும் தங்களின் தவறான செயல்களை மறைக்கவே இந்த அடக்குமுறையை ஆரம்பித்ததாக பலரும் நம்புகின்றனர் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய விமர்சனங்கள் இருந்தபோதிலும், அமைச்சர் அலஸ், அதிகபட்ச பலத்தை' பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நடவடிக்கைகளின் போது சாத்தியமான துப்பாக்கிச் சூடு குறித்து குடிமக்களை முன்கூட்டியே அவர் எச்சரித்துள்ளார்.
இதன்படி வெளியாகும் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட படங்கள் மற்றும் காணொளிக்காட்சிகளிலிருந்து, அவரின் உறுதியை சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் பின்பற்றுவது தெளிவாகத் தெரிகிறது என்றும் பேராசிரியை சியாமிக்கா ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்
அதேநேரம் போதைப்பொருளுக்கான தேடல்கள் மற்றும் கைதுகளில் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன.
இது, தனியுரிமை மற்றும் அடிப்படை மனித கண்ணியத்தை - மட்டுமல்ல, ஒரு நபரின் நிரபராதி எனக் கருதப்படும் உரிமையையும் மீறுகிறது என்று பேராசிரியை சுட்டிக்காட்டியுள்ளார்.