ராஜபக்சக்களின் காவலனாக ரணில்: சஜித் குற்றச்சாட்டு- செய்திகளின் தொகுப்பு
மக்களை மரணப்படுக்கைக்கு தள்ளி நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்துவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரி விதிப்புகள் மூலம் மக்களை துன்பத்துக்குள் தள்ளியுள்ளார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும், “வற் வரி மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதீதமாக அதிகரித்தமையினாலயே சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
நாட்டை வங்குரோத்து அடையச்செய்த தரப்புடன் எப்படி ஆட்சி அமைப்பது? எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதற்கும் அஞ்சாமல் தொங்கு பாலத்தில் இருந்து ராஜபக்ச குடும்பத்தை மீட்டு, தற்போது கேக் கூட ஊட்டி விடுகின்றார்.
நாட்டின் 220 இலட்சம் மக்களை ஜனாதிபதி மறந்து விட்டாலும், நாட்டு மக்களை மறக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை. வற் வரியால் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
இவ்வாறு மக்களின் வாழ்க்கை சீரழிந்தாலும், ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை , ராஜபக்சர்கள் உட்பட மொட்டு மோசடிக்காரர்களை பாதுகாப்பதே அவரின் நோக்கம்” என கூறியுள்ளார்.
இந்த செய்தியுடன் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |