குவியும் அமெரிக்க போர் விமானங்கள்!! அதிகரித்த இறப்புக்கள் - இப்படிக்கு உலகம்
மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அமெரிக்கா தனது போர் விமானங்களை அனுப்புவதாக The United States Central Command (CENTCOM) அறிவித்துள்ளது.
2020 ஜனவரி 3ம் தேதி ஈராக்கில் அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது, ஆனால், அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை.
இந்நிலையில், குவாசிம் சுலைமானியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கும் நிலையில் பதிலடி கொடுக்க ஈரான் மத்திய கிழக்கு பிராந்தியில் உள்ள அமெரிக்க நலன்கள் மீது தாக்குதல் நடத்தும் என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஈரானை எச்சரிக்கும் வகையில் மத்திய கிழக்கில் அமெரிக்க தனது படைகளை அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக போர் விமானங்கள் அனுப்பியுள்ளது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,