அஞ்சல் ரயில்கள் உட்பட 20 ரயில் சேவைகள் ரத்து
கோவிட் தொற்று அதிகரித்ததன் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து இரவு அஞ்சல் ரயில்கள் உட்பட 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பிலிருந்து பதுளை , திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் ஆறு இரவு அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கொழும்பு வெயங்கொட, கொழும்பு-மீரிகம , கொழும்பு-அம்பேபுஸ்ஸ , கொழும்பு-பாணந்துறை , காலி-அளுத்கம இடையே பயணிக்கும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பயணிகள் அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை, மேலும் ஆறு
அலுவலக ரயில்கள் சமூக தூரத்தைப் பராமரிக்கும் வகையில் மேலதிகமாக சேவையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri