நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவங்கள் (PHOTOS)
நாடளாவிய ரீதியில் நாளுக்கு நாள் பல்வேறு விபத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
திருகோணமலை
திருகோணமலை-உட்துறைமுக வீதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாதியர் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் மற்றுமொருவரும் காயம் அடைந்துள்ளார்.
இவ்விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமைக்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த தாதியர் உத்தியோகத்தரான திருகோணமலை லிங்க நகர் பகுதியைச் சேர்ந்த எஸ்.துஸ்யந்தி (41வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த உவர்மலை-மத்திய வீதியில் வசித்து வரும் எம்.சிவநேசராஷா (68வயது) என்பவரும் காயம் அடைந்த நிலையில் திருகோமணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம்
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி நகர் பகுதியில் இருந்து நுணாவில் நோக்கி ஏ - 9 வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த இளைஞர்களை அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதி விட்டு தப்பித்துச் சென்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 26 வயதான க. நிசாந்தன் என்பவர் விபத்தில் சிக்கி பலியானதுடன், அவருடன் பயணித்த மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான தி.பார்த்தீபன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி: ராகேஷ்
| சிந்தங்கேணி பகுதியில் விபத்து: இளைஞர் ஒருவர் படுகாயம்(Photos) |
மரண வீட்டில் அரசியல்.. 1 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam