2025இன் இதுவரையான காலப்பகுதியில் பறிபோன சுமார் ஆயிரம் உயிர்கள்
2025ஆம் ஆண்டில் இதுவரை இடம்பெற்ற விபத்துக்களில் சுமார் ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில், விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்வது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவோரைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
அதன்படி, ஜனவரி 1 முதல் மே 18 வரையிலான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 26,413 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
