மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அறிவுறுத்தல்: அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள விடயம்
திடீர் விபத்துக்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி, திடீர் விபத்துக்களால் வைத்திய அமைப்பில் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
திடீர் விபத்துக்கள் தொடர்பான விசேட பொது விழிப்புணர்வு பேரணியொன்று இன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலை முதல் சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணித்தது.
அமைச்சரின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற குறித்த பேரணியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
திடீர் விபத்துக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வாழும் மக்களில் அதிகளவானோர் திடீர் விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த விபத்துகள் தடுக்கக்கூடியவை. இதன் ஊடாக சுகாதார சேவைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிதும் பயனளிக்கும்.
விபத்துகளைத் தடுப்பதற்கான தலையீடு
ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியுடன் முன்னேறிச் செல்லும்போது, விபத்துகளைத் தடுப்பதற்கான தலையீடுகள் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அம்சத்திலும் செய்யப்பட வேண்டும்.
அத்துடன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி, சுகாதார ஊழியர்களை அதில் இணைத்து தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தியும், திடீர் விபத்துகளால் வைத்திய அமைப்பில் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
