நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானுடம் மோதி விபத்து: இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் படுகாயம்
திருகோணமலை, கந்தளாய் பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து (09) இன்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஆண்டாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிசொகுசு வானுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சீனக்குடா விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் விமானப்படை உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
காயமடைந்தவர்கள் விமானப்படை உத்தியோகத்தர்களான ஆர்.எம். நுவன் சமீர பண்டார (32 வயது) மற்றும் சுரங்க கருணாரத்ன (43 வயது) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மது போதையில் இருந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளதுடன்,விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
