தமிழர் பகுதியில் இடம்பெற்ற இரு வெவ்வேறு விபத்துக்களில் மூவர் வைத்தியசாலையில் (Photos)
வீதியால் செல்வதற்கு பல்வேறு நிபந்தனைகளும், விதிமுறைகளும் காணப்படுகின்ற போதும் அதனை பின்பற்றாமல் விடுவதனாலேயே விபத்துக்கள் ஏற்படுகின்றது.
திருகோணமலை
மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி மூதூர் மல்லிகைதீவு சந்தியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து கடமைக்காக திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவிக்கு சொந்தமான வாகனமே இன்று (28) விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தின் போது மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கோபாலரட்ணம் உட்பட ஊழியர்கள் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த மூன்று பேரில் மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த செயலாளர் உட்பட இரண்டு பேரும் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி: பதுர்தீன் சியானா
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் பயணித்த வான் ஒன்றினை இடித்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போது தாங்கள் பொலிஸ் என கூறி தப்பிச்செல்ல முயன்ற வேலை மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் மற்றவர் ஐயன் குளம்பொலிஸ் நிலையத்திலும் கடமை ஆற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது
செய்தி:தீபன்