நேருக்கு நேர் மோதுண்ட பேருந்துகள் - நால்வர் காயம் (PHOTO)
கினிகத்தேன - பெரகஹமுல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு இ.போ.ச பேருந்துகளும், தனியார் பேருந்தொன்றும் இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் நேருக்கு நேர் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து பயணிகள் இறங்குவதற்காக பெரகஹமுல பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அவ்வேளையில், கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மற்றுமொரு இ.போ.ச பேருந்து, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தை முந்திச்செல்ல முற்பட்டுள்ளது.
இதன்போது எதிர் திசையில் ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் மோதுண்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் இ.போ.ச பேருந்து சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
