வெள்ளம் ஏற்படுத்திய பள்ளத்தில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்து!
கிண்ணியா - முனைச்சேனை பாலப் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீதியில் ஏற்பட்ட பாரிய குழியில் வீழ்ந்ததன் காரணமாக முச்சக்கர வண்டி நேற்று( 04.12.2025) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதமடைந்தபோதிலும், அதன் சாரதி சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
போதுமான எச்சரிக்கை பலகைகள்
கனமழையின் காரணமாகப் பெருக்கெடுத்த வெள்ளம் வடியாத நிலையில், முறைச்சேனை பாலத்தின் அண்மித்த பகுதியில் வீதியின் ஒரு பகுதி அடியோடு சேதமடைந்தது.
இதனால், வீதியில் ஒரு பெரிய பள்ளம் (குழி) திடீரென ஏற்பட்டுள்ளது.

சீரான ஒளியோ அல்லது போதுமான எச்சரிக்கை பலகைகளோ இல்லாத நிலையில், குறித்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் இந்தப் பள்ளத்தை எதிர்பாராத விதமாக கடக்க முயன்ற போது, அதில் சிக்கி கவிழ்ந்துள்ளது.
பொலிஸாரின் உறுதிப்படுத்தல்
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்துக்கான முதன்மைக் காரணம், வெள்ளம் காரணமாக வீதி சேதம் அடைந்து, பாரிய குழி ஏற்பட்டமையே என உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் காயம் அடைந்த சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவிகள் வழங்கப்பட்ட பின்னர் வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்ச் சேதம் எதுவும் இன்றி சாரதி உயிர் தப்பியது பெரும் ஆறுதலை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் மேலும் விபத்துகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் நோக்கில், வெள்ளத்தால் சேதமடைந்த இந்தப் பாலப் பகுதியை அவசரமாக சீரமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |