பொலிஸ் ஜீப் குடைசாய்ந்து விபத்து (Photos)
நுவரெலியா - டயகம பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனம் நேற்று மாலை விபத்துக்கு இலக்காகியுள்ளது.
விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பொலிஸ் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டயகம பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான பொலிஸ் ஜீப் வாகனம் வீதியிலிருந்து 15 அடி உயரத்திலிருந்து கீழே பாய்ந்து குடைசாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.
டயகம நகரத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பொலிஸ் வாகனத்தில் சாரதியும் பொலிஸ் நிலைய அதிகாரியும் சென்றுள்ளனர். எனினும் இதுவரை விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை டயகம போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
