கிளிநொச்சியில் விபத்து : இருவர் படுகாயம் (Photos)
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் மத்தியகல்லுரி முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 21, 22 வயதுடைய அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் இராணுவ வீரர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
