வாகன விபத்தில் வீதி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்கள் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு (Photos)
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் ஒன்று வீதியின் வலதுபுறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி பின்னர் சிலாபத்தில் இருந்து ஆனைவிழுந்தான் நோக்கி பயணித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ் விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களான நல்லதரன்கடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எஸ்.ஏ.ஜூட் மற்றும் 51 வயதுடைய கே. பிரிம்ஜயந்த குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வானின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 4 மணி நேரம் முன்
6 நாள் முடிவில் வெற்றிநடைபோடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது செய்த மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam