கோப்பாயில் விபத்து: பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கோப்பாய் மத்தியைச் சேர்ந்த 63 வயதுடைய சின்னத்தம்பி குணராசா என்பவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் நாவற்குழி பகுதியை நோக்கி திரும்பிச் சென்றபோது துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த முதியவர் மீது மோதியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri