யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (29.5.2026) இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது பெரியஉளுக்குளம் பகுதியைச் 30 வயதுடையவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த அவரது மனைவி வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்தின் ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri