கிளிநொச்சி ஏ 9 வீதியில் ஏற்பட்ட விபத்து (Video)
கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் கார் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் மோதியுள்ளதால் விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்துள்ளது.
எனினும் காரில் பயணித்த சிரேஷ்ட சட்டத்தரணி சிவபாலசுப்ரமணியம் தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி தப்பித்தார்.
இதன் போது ஏ 9 வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடியிருந்த இளைஞர்களின் உதவியுடன் பொலிஸார் சீர்செய்தனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவித்துள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
