சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து: சிறுவன் பலி
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (27) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்று அதே திசையில் பயணித்த பார ஊர்தி மீது மேதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்தின் போது, துவிச்சக்கர வண்டியை செலுத்திய சிறுவன் படுகாயமடைந்துள்ள நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, பார ஊர்தியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
|    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam