நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் விபத்து : பொலிஸார் விசாரணை (PHOTOS)
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதியே இவ்வாறு படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்தனையிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற பேக்கரி உணவுகளை விற்பனை செய்யும் நடமாடும் குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
லொறியையும், லொறியின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
