குரங்கால் இடம்பெற்ற விபத்து! ஒருவர் உயிரிழப்பு
புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (24.02.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு பகுதி
”புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிய வேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார் சைக்கிளில் கணவர், மனைவி, 6 மாத குழந்தையுடன் பயணித்து கொண்டிருந்த வேளை குரங்கு ஒன்று குறுக்கே மோதியதியுள்ளது.

தாய் தலையில் அடிபட்டதனால் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri