யாழில் விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு (Photos)
யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக
கணவருடன் சென்ற குறித்த கர்ப்பிணிப் பெண் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து
பயணித்துள்ளார்.
தவறி விழுந்து உயிரிழப்பு

காரைநகர் பாலத்தடியில் அவர்கள் பயணிக்கும் போது கர்ப்பிணிப் பெண் திடீரென தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஜெயந்தன் வேதப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam