கடற்தொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை(Photos)
இன்று அதிகாலை 2 மணியளவில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வல்வைட்டித்துறை கரையில் இருந்து 4 கடல் மைல் தூரத்தில் நூற்றுக்கணக்கான இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது.
இதன்போதே வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி மீன்பிடி சங்கத்தைச் சேர்ந்த எஸ்.விஜயராஜா என்பருக்குச் சொந்தமான படகினை ரோலர் படகு மோதி உடைத்து நாசம் செய்துள்ளது.
இதன்போது கடற்தொழிலாளர் கடலில் வீ்ந்து அதிஸ்டவசமாக உயிர் தப்பித்துள்ளார்.
கடற்தொழிலாளர்களின் கவலை
கடற்தொழிலாளரது 4 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலின், பிரதமர் மோடிக்கும் கடற்தொழிலாளர்கள் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள் எமது வாழ்வாதாரத்தை் மேலும் பாதிப்படைய செய்ய வேண்டாம். எம்மை உயிரோடு வாழவிடுங்கள் இந்திய தமிழ் உறவுகளே.
கட்சியினரால் அச்சுறுத்தல்
2021 ஆம் ஆண்டும் இதே காலத்தில் எனக்கு வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்ததால் எனக்கு ஒரு கட்சியினரால் அச்சுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! எங்களுது வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்திய கடற்தொழிலாளர்களது இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்துங்கள்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan
