கோர விபத்தில் தந்தை பலி - மகள் படுகாயம்
புத்தளம் பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இளம் யுவதி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று காலை வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தந்தை பலி
மோட்டார் சைக்கிளிலில் பயணித்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் உயிரிழந்த நிலையில், அவரின் மகள் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த இளம் பெண் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri