திருகோணமலையில் கோர விபத்து:ஒருவர் பலி- பலர் காயம்
திருகோணமலை - கந்தளாய் அக்பர் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (4) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி வந்த, தனியார் பேருந்துஒன்றும், திருகோணமலையிலிருந்து தென்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பார ஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, பேருந்தில் 25 வயதான மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, முகமட் அஸ்கர் முகமட் அர்சாத் என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பயணிகளும் படு காயங்களுடன், கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த விபத்து நடந்த இடத்தில், விபத்துக்குள்ளான பஸ் வண்டிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கெப் வண்டி ஒன்று, வீதியை விட்டும் விலகி மரம் ஒன்றில் மோதி, அந்த கெப் வண்டியும் விபத்துக்குள்ளானது.
இதனால், அதில் பயணம் செய்த சிறுவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
