கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்து - 27 பேர் காயம் - 7 பேர் ஆபத்தான நிலையில்.....
கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகரிற்கு 500 மீற்றர் தூரத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியொன்றும் விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வீதி விபத்து
விபத்தைத் தடுக்க ஓட்டுநர் பேருந்தை வீதியில் இருந்து அகற்ற முயன்றபோது, மண் தளர்வாக இருந்ததால், பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 07 பேர் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி பொது வைத்தியசாலையிலும், 20 பேர் கஹவத்தை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 23 மணி நேரம் முன்

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
