கோர விபத்தில் பலியான குழந்தை - தந்தை உட்பட மூவர் படுகாயம்
நீர்கொழும்பில் இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
கடவல பிரதேசத்தில் வைத்து, குறித்த முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெறுள்ளது.
விபத்தின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை உட்பட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
குழந்தை பலி
காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்தநிலையில் விபத்துக்கு அதிக வேகமே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலேயே, முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam