மிஹிந்தலையில் கோர விபத்து! இளைஞர் பலி
அநுராதபுரம் -மிகிந்தலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது அநுராதபுரம் - மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீப்புக்குளம் - கலன்பிந்துனுவெவ வீதியின் பாளுவெவ பகுதியில் நேற்றையதினம்(24.2.2026) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு
சீப்புக்குளம் பகுதியிலிருந்து கலன்பிந்துனுவெவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக தம்மன்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட விசாரணை
உயிரிழந்தவர் மிஹிந்தலை, சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மற்றைய நபருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து மிஹிந்தலை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதிவேகப் பயணமே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri